சடலமாக கிடந்த ஊழியர் – பிரேதத்தை கைப்பற்றிய போலீஸ்: அடையாளத்தை விசாரிக்கும் அதிகாரிகள்

food-delivery-man-found-dead/

டகோட்டா கிரசண்ட் (Dakota Crescent) பிளாக் 58ல் 32 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலை 9.52 மணிக்கு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர் அசைவற்று காணப்பட்டார் என்றும், மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இறந்தவர் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் சதிச் செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.