“வாரத்தில் 59 மணிநேரம் வேலை” செய்யும் உணவு விநியோக & தனியார் வாடகை ஓட்டுநர்கள்

Joshua Lee & Zheng Zhangxin

சிங்கப்பூரில் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்கள் (PHV) வாரத்தில் 59 மணிநேரம் வேலை செய்வதாக புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆய்வின் அடிப்படையாக கொண்ட இந்த அறிக்கை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகத்தால் நேற்று முன்தினம் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்

சுமார் 49 சதவீத PHV ஓட்டுனர்கள், பிளாட்பார்ம் வேலைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினர்.

மேலும் 76 சதவீத PHV ஓட்டுனர்கள், தாங்கள் PHV ஓட்டுனர்களாக மாறுவதற்கு நெகிழ்வுத்தன்மையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உணவு விநியோக ஓட்டுநர், ஒரு மாதத்திற்கு S$5,000 வருமானம் ஈட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 12 மணிநேரத்திற்கு மேல் சைக்கிள் ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.

PHV ஓட்டுநர்களில் 57 சதவீதம் பேர் வேலையில் ஏற்படும் அழுத்தங்களைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.

சுமார் 40 சதவீதம் பேர் வேலையை கொண்டு திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!