சிங்கப்பூரைப் போல மாறப்போகும் இந்தியா! – இந்தியா முழுவதும் அமைக்கவிருக்கும் உணவுச்சாலைகள் திட்டம்

Food Junction
இந்தியாவிலிருந்து கல்வி,மருத்துவம்,வணிகம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு காரனங்களுக்காக சிங்கப்பூரை நோக்கி பெரும்பாலான இந்தியர்கள் பயணிக்கின்றனர்.இந்நிலையில் சிங்கப்பூரின் உணவுக் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக,இந்தியாவும் சுவையான உள்ளூர் உணவு வகைகளை விற்கக்கூடிய 790 உள்நாட்டு உணவுச்சாளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சுகாதாரமான உணவு வகைகள் மட்டுமின்றி நாட்டின் தனிச்சிறப்பான தெருவோர உணவுக் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் உணவுச்சாலைகள் விளங்கும்.கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது இத்திட்டம் குறித்து படங்களுடன் விளக்கமளிக்கப்பட்டதாகவும் உறுப்பினர்கள் அதனை ஆர்வத்துடன் வரவேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த 5 ஆண்டுகளில்,ஆண்டுக்கு 158 உணவுச்சாளைகளை அமைக்க மத்திய அரசு நிதி வழங்கும்.

ஒரு உணவுச்சாலைக்கு 50 லட்சம் ரூபாய் என்ற வீதம் மொத்தம் 790 உணவுச்சாலைகளுக்கு சுமார் ரூ.395 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சுகாதார அமைச்சகத்தால் சமூகத் தணிக்கை மேற்கொள்ள ரூ.19.75 கோடி நிதி ஒதுக்கப்படும். உணவுக்கடைகள், தெருக்கள்,சந்துகள் அடங்கிய தொகுதி உள்நாட்டு உணவுச்சாலையாக அங்கீகரிக்கப்படும்.
தொகுதி உறுப்பினர்களின் அனுமதி பெற்ற உணவுக்கடைக்காரர்களுக்கு உணவுச்சாலையில் இடம் ஒதுக்கப்படும்.அடிப்படையான உள்கட்டமைப்பிற்குத் தேவையான ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கையாளும்.உணவுக்கடைக்காரர்களுக்குத் தேவையான,உணவு வண்டிகள்,தண்ணீர்,சமையல் எரிவாயு,மின்விளக்கு,கழிவு அகற்றம்,கைகழுவும் இடம் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.