சிங்கப்பூரில் 9 புதிய கடைகளைத் திறக்கும் ‘Foodpanda’ நிறுவனம்!

Photo: Foodpanda

சிங்கப்பூரில் உள்ள ‘Foodpanda’ நிறுவனம், சிங்கப்பூர் முழுவதும் புதிதாக 9 கடைகளைத் திறக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்’- வீடியோவைப் பதிவிடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்!

‘Foodpanda’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தங்கள் கடைகளில் ஆர்டர் செய்யும் பொதுமக்களுக்கு 15 நிமிடங்களில் பொருட்களை விநியோகம் செய்யவும், 24 மணி நேரமும் டெலிவரி செய்யும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 9 புதிய கடைகளைத் திறக்கவுள்ளோம். இதில் முதல் கடை பூன் லே ஷாப்பிங் சென்டரில் (Boon Lay Shopping Centre) திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மளிகை பொருட்கள், திண்பண்டங்கள், துரித உணவுகள், ஆல்கஹால், வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் உள்ளிட்ட 5,000- க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மளிகை ஷாப்பிங்கிற்கான தேவை அதிகரிப்பதைத் தக்க வைத்துக் கொள்ள கூடுதல் கடைகள் திறக்கப்பட உள்ளன. கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘Pandamart’ தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்தின் கடைகளின் எண்ணிக்கை 5- லிருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர்கள் 32 மடங்கு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 559 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

எனவே, ஒன்பது புதிய கடைகளை நிறுவுவது, பழைய ‘Pandamart’ கடைகளில் சிலவற்றை இடமாற்றம் செய்வதும், மேம்படுத்துவதும் அடங்கும், இதனால் அவை செயல்படும் குறிப்பிட்ட சமூகத்தின் கோரிக்கைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும். இத்தகைய மேம்படுத்தல்களில் குளிர் சாதனங்கள் பொருத்தப்படும். இதன் மூலம் இறைச்சி மற்றும் கடல் உணவுகளுடன் கூடுதலான புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

அனைத்து ‘Pandamart’ கடைகளிலும் நடப்பாண்டின் இறுதிக்குள் இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களை சில்லறையில் விற்பனை செய்யும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மிக அதிக அளவிலான பொருட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஹல்க்”காக மாறி திடீரென காரை சேதப்படுத்திய ஆடவர் (காணொளி) – போலீசில் புகார்

தனித்துவமான பொருட்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மேலும் தயாரிப்புகள் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘Foodpanda’ நிறுவனத்தின் சிங்கப்பூரின் சில்லறை விற்பனை இயக்குநர் டியாகோ பின்டோ (Retail Director Of ‘Foodpanda’ Singapore, Diego Pinto) கூறியதாவது, “Pandamart விரிவாக்கத்தின் மூலம், டெலிவரி நேரத்தை 24 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களுக்கு கிட்டத்தட்ட 50% குறைப்பதற்கு நாங்கள் ஒரு படி நெருக்கமாக இருப்போம். எங்களது இலக்கு ‘Pandamart’ கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் முடிந்தவரை விரைவாக வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.