சிங்கப்பூர் நிறுவன முதலாளிகள் தங்கள் வேலையாட்களை நேரடி விமானத்தில் அனுப்பி வைக்க வேண்டும் – மனிதவள அமைச்சகம்.!

சிங்கப்பூர் நிறுவன முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் வேலையாட்களை நேரடியான விமானத்தில் அனுப்பிவைக்க வேண்டும், என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் படி, முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் வேலையாட்களை சர்வதேச துறைமுற வழியாக அவர்களின் சொந்த நாட்டுக்கு செல்ல நெருக்கமான வழிமுறைகளை அமைத்து தர வேண்டும், என்று கூறியுள்ளது.

தன்னுடைய வேலையாட்களை அனுப்பிவைக்க சாத்திய கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. FDW நாடு திரும்பும் திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்றாலும் கூட, இதற்கு அனைத்து முதலாளிகளும் உடன்படுவது கிடையாது.

வேலையாட்கள் நீண்ட நேரம் அதாவது 12 மணி நேரம் வரை பயணங்களில் சிக்கி தவிப்பதாக, பல வழக்குகள் உள்ளதாக அரசு அல்லாத அமைப்புகள் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் தங்களின் கூடுதல் இணைப்பு விமானத்தை தவர விடுவதாகவும், பசியில் தவிப்பதாகவும் வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளது.

இந்த இன்னல்களை கருத்தில் கொண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.