வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் வெளிநாட்டு பணியாளர்களை விசாரிப்பதை கட்டாயமாக்கலாம்!

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களை, அவர்கள் வேலை செய்யும் காலத்தில் நலம் விசாரிப்பதை கட்டாயமாக்கலாம் என்று மனிதவள அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு ஏஜென்சிகள், வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களை விசாரிப்பது கட்டாயமில்லை என்றாலும், முதலாளிகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களை விசாரிக்கும் சில வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் பற்றி தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேலையிட விபத்துகளில் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – காப்பீட்டுத் திட்டம் மறுஆய்வு

இது ஒரு நல்ல நடைமுறை என்று கருதுவதாகவும், இதனால் பணிப்பெண்கள் தங்கள் கவலைகளை தெரிவிக்க இன்னும் ஒரு கூடுதல் வாய்ப்பு அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்போது, வேலைவாய்ப்பு ஏஜென்சிளுக்கு சில பொறுப்புகள் இருப்பதை அமைச்சகம் கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அதே போல, ஒப்பந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மனநலம் தொடர்பான உதவிகளை வழங்க முடியுமென்றால் அதையும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சிங்கப்பூரில் 5 பெரிய தங்கும் விடுதிகளில் வசிக்கும் 10,000 பேருக்கு முதலில் தடுப்பூசி!

தற்போது பணிப்பெண்களுக்கு வாராந்திர ஓய்வு நாள் வழங்கப்படுகிறது, ஆனால் முதலாளி அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க விரும்பினால் அவர்கள் ஓய்வு நாளில் வேலை செய்ய ஒப்புக் கொள்ளலாம்.

துன்புறுத்தல் வழக்குகளை மருத்துவர்கள் கண்டறிவது, அது பற்றி புகாரளிக்கும் வழிகளை மேம்படுத்துவது பற்றி மருத்துவ சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக திருமதி கான் கூறினார்.

ஓய்வு நாட்கள் இல்லாத, கைத்தொலைபேசிகள் வழங்கப்படாத ஊழியர்களை இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம் சந்தித்து வருவதாகக் கூறினார்.

தன் கஷ்டங்களை தள்ளிவைத்து, பிறருக்கு ஓடி சென்று உதவுவதில் சிறந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள்…!