கொடி,கொடி,கொடி பறக்க! – உலகளவில் வெளிநாட்டுத் திறனாளர்களை அதிகம் ஈர்க்கும் சிங்கப்பூரின் பெருமை!

indian worker jailed stalking woman work
Singapore

ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் சொந்தநாட்டில் மட்டுமின்றி அயல்நாட்டிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

தனித்துவமான திறன் வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவி வருகிறது.சர்வதேச நாடுகளிலிருந்து திறமையான ஊழியர்களை பணியமர்த்தும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது.

பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெறும் ஒரே ஆசிய நாடு என்னும் பெருமையும் சிங்கப்பூரைச் சேரும்.131 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய நிலையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்த அறிக்கையானது இன்சேட் மற்றும் போர்ட்டுலன்ஸ் பயிற்சிக் கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்டன.

உலகளாவிய பட்டியலில் 2013-லிருந்து தொடர்ச்சியாக சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.இடையில் 2020-ஆம் ஆண்டில் மட்டுமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.