வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான சேவை! – மனிதவள அமைச்சகத்தின் ஆதரவுடன் திறக்கப்பட்டுள்ள மையம்

Pic: File/Today
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றி முதலாளிகளும் பணியாளர்களும் முன்கூட்டியே கலந்தாலோசிக்க வேண்டும் என்று மனித வள துணை அமைச்சர் கான் சியாவ் ஹூவாங் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி முதல் தேதி முதல் அந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட பலசேவை மையத்தின் திறப்புவிழாவில் பங்கேற்ற போது தெரிவித்தார்.
(FAST Hub) எனப்படும் இந்த மையம் வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான சமூக உதவி,பயிற்சி சங்கத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது.மையத்திற்கு மனிதவள அமைச்சகம் ஆதரவு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் தங்களுடைய பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகைகளை ஒருங்கினைந்துக் கொண்டாட உதவும் நோக்கில் சமூக கூடம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும்,360 பணிப்பெண்கள் வரை தங்கக்கூடிய தங்கும் விடுதியும் வளாகத்தில் உள்ளன.இச்சேவைகள் அனைத்தையும் பணிப்பெண்கள் குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.