வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

‘வேலைக்காக வெளிநாடு செல்ல தயாராகும் ஊழியர்கள் செல்லும் நிறுவனங்கள் மற்றும் உங்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட்கள் குறித்து நன்கு விசாரித்து தெரிந்து கொண்ட பிறகுதான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு தேர்வாகி வேலைக்கு சென்ற 100 மென்பொறியாளர்கள், அங்கு சென்றதும் மியான்மர் நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் சைபர் கிரைம் என்னும் இணைய வழி குற்றங்களை செய்யவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த 2 பேர் கைது; வீண் வேலையில் ஈடுபட்டால் கைது உறுதி

அவர்கள் மறுத்ததன் விளைவாக, அடி, உதை மற்றும் பல்வேறு வகையான சித்ரவயையும் அவர்கள் சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சமூக ஊடக வழி வெளியாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், அந்த அந்த நாட்டின் துாதரகங்களில் நன்கு விசாரித்த பின்னரே வேலைக்கு செல்ல வேண்டும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்… கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய 25 பவுன் நகை கொள்ளை – சிக்கிய கும்பல்