மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலேசியாவுக்கு சிங்கப்பூர் அரசு செய்த உதவிகள் என்ன?- நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் (Dr Wan Rizal), மலேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கு உதவ அரசு எந்த வகையிலும் உதவி செய்ய முயற்சிகள் உள்ளதா? என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

கொலம்பியா, மொரீஷியஸ், டென்மார்க் நாடுகளுக்கான தூதர்களை நியமித்தது சிங்கப்பூர் அரசு!

இதற்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துளளார். அதில் கூறியிருப்பதாவது, “கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மலேசியா நாட்டின், கோலாலம்பூர் மற்றும் மற்ற ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தை சந்தித்தது. மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பலர் உயிரிழந்தனர். உடமைகள் பெருமளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, கஷ்டங்களும், துன்பங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த கடினமான நேரத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இரங்கல் தெரிவிக்கவும், சிங்கப்பூரின் உதவியை வழங்கவும், பிரதிநிதி டத்தோஸ்ரீ சைபுதீன் அப்துல்லாவுக்கு (Sri Saifuddin Abdullah) கடிதம் எழுதியிருந்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி அன்று, ராய் புயலால் பாதிக்கப்பட்ட மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் பொது நிதி திரட்டலை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் 60,000 அமெரிக்க டாலர்களை விதைப் பணமாக அளித்தது.

ஜனவரி 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

சிங்கப்பூர் அரசாங்கத்தின் பங்களிப்பு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், மலேசிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அமெரிக்க டாலர் 50,000 நிதியை தருவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியது. இது அவசரகால சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மையங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) ஒரு பேரிடர் மீட்புக் குழுவை தயார் நிலையில் வைத்துள்ளது. ஆசியான் கட்டமைப்பின் மூலம் நமது ஆசியான் சகாக்களிடமிருந்து ஆதரவுக்கான கோரிக்கைகள் இருந்தால். மலேசியாவுக்குத் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் வழங்கக்கூடிய எந்த உதவியையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.