வெளிநாட்டு ஊழியருக்கு திடீரென நின்றுபோன இதயத்துடிப்பு – வறுமையில் உள்ள குடும்பத்தை காப்பாற்ற வந்த அவருக்கு ஏற்பட்ட அவலம்

(Reuters file photo)

சிங்கப்பூரில் பணிபுரியும் 25 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர் ஜுன் என்ற என்ற மலேசிய ஊழியர் சுமார் 1 அரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த மார்ச் நடுப்பகுதியில் காய்ச்சல் மற்றும் முதுகுவலி ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அவருக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த மாதம் ஏப்., 1ல் ஆபத்தான நிலையில் சாங்கி பொது மருத்துவமனையில் (CGH) அனுமதிக்கப்பட்டார்.

வெளிநாட்டவர்களின் பலே திட்டம்.. தப்பிச் செல்ல முயன்ற இருவரை விமானத்தில் வைத்து தூக்கிய போலீஸ்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் திடீரென நின்று போனதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் மருத்துவர்கள் போராடி அவரின் இதய துடிப்பை மீண்டும் கொண்டு வந்து அவரை உயிர்ப்பித்தனர்.

அவருக்கு கடுமையான மெலியோய்டோசிஸ் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது அசுத்தமான மண் மற்றும் நீர் மேற்பரப்பின் நேரடி தொடர்பு மூலம் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும்.

விதிகளை மீறிய ஊழியர்கள்… அதிரடி சோதனையில் பிடித்த அதிகாரிகள் – S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உதவ, அவரது சகோதரி யெனிஸ் சாய் நிதி திரட்டும் ஏற்பாட்டை செய்துள்ளார்.

வறுமையில் உள்ள அவரின் குடும்பத்தை நடத்துவதற்கு உணவுக் கடை உதவியாளராக அவர் பணியாற்றி வந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

foreign worker bacterial-infection

அவர் மலேசியாவின் பேராக்கில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.