பிழைப்புக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், சடலமாக செல்லும் சோகம்… மேலும் ஒரு ஊழியர் மரணம்

collapsed-wall death
Workplace Safety and Health Council

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் 25 பேர் வேலையிடத்தில் உயிரிழந்துள்ளனர் என்று முன்னர் செய்திகள் வெளியாகின, தற்போது மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் Warehouse கிடங்கில் பயங்கர தீ.. 13 அவசர ஊர்திகளுடன் விரைந்து சென்றது SCDF

கடந்த ஜூன் 10 ஆம் தேதி, செராங்கூன் கார்டனில் உள்ள தனியார் வீட்டில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 வயதான பங்களாதேஷ் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

CNA இன் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்; 44 Tai Hwan Heights இல் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து அன்று மாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறினார்.

ஊழியர், தனியார் குடியிருப்பு சுவரை உடைத்துக் கொண்டிருந்தபோது சுவரின் ஒரு பகுதி அவர் மீது இடிந்து விழுந்தது.

அதன் பின்னர் மீட்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அந்த நபர் Sam Wooவின் (SEA) ஊழியர் ஆவார், மேலும் அந்த இடத்தில் கட்டுமான பணிகளை Beow Hock Engineering நிறுவனம் பார்த்து வந்தது.

விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், வேலையிடத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு பியோ ஹாக் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் MOM கூறியது.

ஊழியரை பிரிந்து அவரின் குடும்பம் கண்ணீருடன் தவித்து வரும் இந்த சூழலில் அவருக்காக பிராத்திப்போம். பாதுகாப்புடன் இருங்கள்.