லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்

உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் -
Court documents

வெளிநாட்டு ஊழியரின் மரணத்துக்கு காரணமாக இருந்த லிப்ட் பொறியாளர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிப்ட் சரிபார்ப்பு பணியின்போது கட்டுமான ஊழியருக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் லிப்ட் தொழில்நுட்ப பொறியாளருக்கு இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 11) ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தன்னுடைய அலட்சியம் காரணமாக தான் அவர் இறந்தார் என்று 34 வயதான மலேசியரான வோங் செர் யோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பங்களாதேஷ் ஊழியரான திரு ஹொசைன் முகமது சாஹித்தியும், வோங்கும் வேறு வேறு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

450 நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் லிப்ட்டின் உட்புறத்தில் பேனல்களை சரிசெய்வதற்காக TK Elevator நிறுவனத்தில் இருந்து வோங் லிப்ட் டெக்னீஷியனாக வேலை பார்த்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

29 வயதான திரு ஹொசைன், Decor Engineering நிறுவனத்தில் கட்டுமான ஊழியராக பணிபுரிந்தார், இவர் நன்கு பயிற்சி பெற்ற லிப்ட் டெக்னீஷியன் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி 27 அன்று காலை, லிஃப்ட்டின் உட்புறப் பேனலைப் பழுதுபார்ப்பதற்காக வோங்குக்கு திரு ஹொசைனும் அவரது சக ஊழியரும் உதவியுள்ளனர்.

2 வது மாடியில் இடையில் நிறுத்தப்பட்ட லிஃப்டை மேலும் கீழும் இயக்கி பார்த்து சரி செய்யும்போது ஹொசைனின் கை லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டது.

விலா எலும்பு, இடது பக்க கைது மற்றும் கால் லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டதால் அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

SCDF தீவீர மீட்புப்பணியை மேற்கொண்டும் அவர்களால் ஊழியரை காப்பாற்ற முடியவில்லை.

அதிகமான ரத்தம் வெளியேறியதால் திரு. ஹொசைன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.