சிறந்த வசிக்கும் இடங்களாக மாறும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்..!

PHOTO: Today

எதிர்கால தங்கும் விடுதிகள் குறித்த மேம்பாட்டு திட்ட நடைமுறைகள், சிங்கப்பூரில் தொற்றுநோய்க்கு பிந்தைய வெளிநாட்டு ஊழியர்கள் வாழும் முறையை மாற்றும் என்று கூறப்படுகிறது.

S11 தங்கும் விடுதிகளின் நிர்வாக இயக்குனர் திரு. ஜொனாதன் சே கூறுகையில், தங்கும் விடுதிகளுக்கான புதிய மேம்பாட்டு நடைமுறைகள் உண்மையில் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று கூறினார்.

கார் மோதியதில் உணவு விநியோக ஓட்டுநர் உயிரிழப்பு – சாட்சிகளை தேடும் குடும்பம்!

தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் வசிக்கும் இடத்தை மிகவும் விசாலமானதாக மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால், ஒவ்வொரு அறையிலும் குறைவான குடியிருப்பாளர்கள் இருப்பார்கள்.

மேலும், குடியிருப்பாளர்களுக்கு அதிக சமூக வசதிகள் இருக்கும் என்றும் கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய உடற்பயிற்சி கூடத்திற்கு பதிலாக, குடியிருப்பாளர்கள் பயன்படுத்த மூன்று சிறிய உடற்பயிற்சி கூடங்கள் இருக்கக்கூடும் என்று திரு சே கூறினார்.

குறைவான எண்ணிக்கை கொண்ட ஊழியர்கள், குறிப்பிட்ட அதே வசதிகளைப் பயன்படுத்துவதால், ஊழியர்கள் வசதிகளை சிறப்பாக அனுபவிக்கக்கூடும், மேலும் அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் சூழல்களில் முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர் கூறினார்.

சமையலறைகள், கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் ஆகியவை எதிர்கால தங்கும் விடுதிகளில் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

HDB குடியிருப்பின் ஜன்னல் விளிம்பில் காயங்களுடன் கிடந்த பெண்…!