சிங்கப்பூரில் முன்னர் காயமடைந்த இந்திய ஊழியர்… வேலையிட பாதுகாப்பிற்கு தூதுவராக செயல்படுகிறார்!

வெளிநாட்டு ஊழியர்
(Photo: MOM/FB page)

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ACE (FACE) அமைப்புடன், சிங்கப்பூரில் முன்னர் காயம் அடைந்த 25 வயதான முத்தையா திருமுருகன் என்ற இந்திய ஊழியர் தற்போது தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

அவர் தற்போது ஊழியர்களின் வேலையிட பாதுகாப்பிற்கு சிறந்த தூதுவராக செயல்பட்டு வருகிறார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சிறந்த சுகாதார நடைமுறைகள் குறித்து தனது சக ஊழியர்களுக்கும் கற்றுக்கொடுக்க, திருமுருகன் FACE தன்னார்வலராகவும் பாதுகாப்பு இடைவெளி தூதராகவும் செயல்படுவதற்கு கையெழுத்திட்டுள்ளார்.

வேலையிடத்திலும், தங்கும் விடுதியிலும் தனது சக ஊழியர்களுக்கு அவர் தேவையான உதவிகளை செய்துவருகிறார்.

(Photo: MOM/FB page)

ஊழியர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதை உறுதிசெய்வது மற்றும் சமீபத்திய அரசாங்க ஆலோசனைகளையும் அவர் அவர்களிடம் கூறுவார்.

ஊழியர்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று அறிந்துகொள்ள தாம் எப்போதும் அவர்களிடம் உரையாடுவதாகவும், நெறிமுறைகளைப் பின்பற்றி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர்களிடம் சொல்வதாகவும் அவர் கூறினார்.

நாம் நம்மைப் சுயமாக பாதுகாக்கும் பட்சத்தில், நலமுடன் நாம் நம் குடும்பங்களைச் சந்திக்க சொந்த நாடு திரும்ப முடியும், என்றார் திருமுருகன்.