ஜூரோங் தீவில் வெளிநாட்டு ஊழியர் கடலில் விழுந்து பலி

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடலில் விழுந்து பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜூரோங் தீவில் உள்ள சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் கட்டமைப்பு பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது அவர் கடலில் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 25 அன்று காலை 11 மணியளவில் ஏற்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

அவர் 41 வயதான இந்திய நாட்டவர் என்றும், Plant General சர்வீசஸ் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து ஊழியரின் உடல் அதே நாளில் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் MOM கூறியுள்ளது.

கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு நிறுவனத்துக்கு வேலை நிறுத்த ஆணையை அமைச்சகம் வழங்கியுள்ளது.

மேலும் விபத்து குறித்து MOM விசாரணை நடத்தி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் இருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்த இந்திய ஊழியருக்கு தண்டனை