உடல் நசுங்கி உயிரிழந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு 3 குழந்தைகள் – உதவும் உள்ளங்கள் முன்வரலாம்!

Bangladeshi worker dies after being crushed by steel bars at Bedok worksite
Google Maps and ItsRainingRaincoats

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் (வயது 31) கடந்த டிசம்பர் 11 சனிக்கிழமை அன்று காலை, வேலையிடத்தில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

அந்த கட்டுமான ஊழியர், வங்கதேசத்தை சேர்ந்த Isalm Robiul என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனை உள்ளூர் சமூக தொண்டூழிய அமைப்பு ItsRainingRaincoats (IRR) நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறிய 22 உணவு-பான கடைகளை மூட உத்தரவு!

என்ன நடந்தது?

ஊழியர் மீது இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 11) காலை இந்த சம்பவம் நடந்தது, உயிரிழந்த அவர் வங்காளதேச ஊழியர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

விபத்தின் போது, ​​டவர் கிரேன் மூலம் அந்த எஃகு கம்பிகள் மேலே தூக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் Bedok Reservoir பார்க்கில் உள்ள பணித்தளத்தில், அதாவது “ஹோம் டீம் நேஷனல் சர்வீமென்ஸ்” (NSmen)-க்கான கிளப்ஹவுஸ் கட்டப்பட்டு வரும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து, 900 பெடோக் நார்த் ரோட்டில் காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குடும்பத்திற்கு உதவ முன்வாருங்கள்

ஊழியரின் மறைவால் தாங்கள் மனம் உடைந்ததாக IRR தனது முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளது.

31 வயதான அவர் தனது மனைவியை இளம் விதவையாகவும், கூடவே மூன்று குழந்தைகளையும் விட்டுச் சென்றுவிட்டார் என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.

வங்காளதேசத்தில் உள்ள அவரின் குடும்பத்திற்கு உதவக்கூடிய நபர்கள் யாரேனும் இருந்தால், Facebook வழியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு IRR வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேலையின் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஊழியர் உட்பட 3 பேருக்கு Omicron கிருமி வகை அடையாளம்