சிங்கப்பூரில் சுமார் 20 வருடங்கள் பணிபுரிந்த வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த வீடு கனவு நிறைவேறியது!!

Photo courtesy of Ruby Nazareno

கிட்டத்தட்ட 20 வருடங்கள் சிங்கப்பூரில் உதவியாளராகப் பணிபுரிந்த பெண் ஊழியர், இறுதியாக அவரின் குடும்பத்திற்காக சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

வீட்டு பணிப்பெண்களாக சிங்கப்பூரில் பல பிலிப்பைனியர்கள் வேலை செய்கின்றனர், அதாவது சுமார் 250,000 பேர் பணிபுரிவதாக இணையம் தெரிவிக்கிறது.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை – 303 பேரிடம் போலீசார் விசாரணை

ஆனால் நம்மில் பலர் இங்கு வேலை செய்து மட்டுமே நம் வாழ்க்கையை கழிக்கின்றோம், நமக்கு சொந்த வீடு இல்லை என்ற ஏக்கம் பல ஊழியர்களுக்கு உள்ளது.

இதுபற்றி அந்த பணிப்பெண் கூறுகையில்; “2000ஆம் ஆண்டில் நான் சிங்கப்பூர் வந்தேன். நான் வேலை பார்த்த முதல் குடும்பம் ஜூரோங்கில் உள்ளது. சிங்கப்பூரில் நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும், நான் நிறைய சம்பாதிக்கவில்லை.”

“நான் செலுத்த வேண்டிய ஏஜென்சி கட்டணமே மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் என்னால் முடிந்ததைச் சேமித்து, அதை வீட்டிற்கு அனுப்பவும் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்,” என்றார்.

“ஆனால், என் சகோதரனை வளர்க்க உதவுவதற்கும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாடகை காரணமாக நான் அனுப்பும் பணம், என் பெற்றோர் சம்பாதித்தது ஆகியவை என் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. ”

“அதுமட்டுமல்லாமல், எனது சகோதரி அவரின் கணவரைப் பிரிந்து, தனது சிறு குழந்தையுடன் எங்கள் வீட்டில் உள்ளார்” என்றார்.

“தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில், கடினமாக உழைத்து என்னால் முடிந்த அளவு சேமிப்பதில் கவனம் செலுத்தினேன்.”

சுமார் 20 வருடங்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்த அவரின் கடின முயற்சிக்கும், உழைப்புக்கும் பலனாய் அவரின் சொந்த வீடு கனவு நினைவானது.

“எனது நிலம் சிறியது, ஆனால் அது என் குடும்பத்திற்கு போதுமானது.”

“உண்மையில், அது எனக்கு போதுமானது” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை