வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடிகள் நீட்டிப்பு!!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சில வர்த்தகங்கள் மற்றும் முதலாளிகளுக்கான வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடிகள் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.

கோவிட்-19 சூழலில் தொடர்ச்சியான பாதிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் பொது சுகாதார நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்

கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் பணிபுரியும் அனைத்து work-permit அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் S$250 வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (டிச. 21) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடி இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப வாரங்களில் இந்தத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் வரவு அதிகரித்தாலும் கூட, அவைகள் குறிப்பிடத்தக்க ஊழியர் பற்றாக்குறை மற்றும் அதிகமான செலவுகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றன என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தள்ளுபடியின் நீட்டிப்பு, சுமார் 15,000 நிறுவனங்கள் பயன்பெறும்.

மரத்தூளுக்குள் தங்கம்…சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்- அதன் மதிப்பு ரூ.49 லட்சமாம்!