“வேலையில் பிரஷர் தாங்கல..” – தப்பித்து காட்டுக்குள் சென்று 6 நாள் வாழ்ந்த வெளிநாட்டு ஊழியர்: பசி எடுத்ததும் அவசர எண்ணை அழைத்த சோகம்

foreign worker work stressed escapes forest
Screenshot from Buletin TV3/YouTube

வேலையில் பிரஷர் தாங்கல.. வேலையில் இருந்து தப்பித்து ஓடி காட்டில் வாழ முடிவு செய்தார் வெளிநாட்டு ஊழியர் ஒருவர்.

41 வயதான மலேசிய ஊழியரான அவர் காட்டுக்குள் சென்ற ஆறு நாட்களுக்குப் பிறகு மலேசிய தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

காட்டுக்குள் பசியுடன் அவதிப்பட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 9) இரவு 11:44 மணிக்கு அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் மூன்று மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையின் அழுத்தம் காரணமாக காட்டுக்குள் வாழ முடிவு எடுத்த அவர், கடந்த ஜூன் 3 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து டெர்மினல் அமன்ஜெயாவுக்கு பேருந்தில் ஏறி சென்றார்.

வீரமாக கிளம்பிய அவரால் 6 நாள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆறு நாட்கள் காட்டில் இருந்த பிறகு, தாம் தொலைந்து போனதாகவும் பசியோடும் இருப்பதாகவும், தனது மொபைல் மூலம் அவசர தொலைபேசி எண்ணை அழைத்து கூறியுள்ளார்.

அதாவது கடந்த ஜூன் 9 இரவு 11:44 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊழியர் சொன்ன இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் நூர் அகமது தெரிவித்தார்.

இறுதியாக நள்ளிரவு 2.46 மணியளவில் ஊழியரை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

வேலை செய்த இடத்தில் கைவரிசை காட்டிய ஊழியர் – S$173,000 மதிப்புள்ள வாட்ச் திருட்டு… ஊழியர் சிறையில் அடைப்பு

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்