வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு தடை – MOM அதிரடி

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க சில சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 15 நிறுவனங்கள் புதிதாக எந்த வெளிநாட்டு ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்த முடியாது.

சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் மற்ற குடியிருப்பாளர்களுக்கு இது தேவை –  பிப். 6 அப்டேட்!

இந்த தற்காலிகமான தடை 3 மாத காலம் வரை தொடரும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

2022ஆம் ஆண்டு செப்டம்பரில் விதிக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளை அந்நிறுவனங்கள் மீறியதாக மனித வள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

இதுவரை 760க்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளன, அதே போல நிறுவனங்களுக்கு 48 வேலை நிறுத்த உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வேலையிட விபத்துகளில் சிக்கி கடந்த ஆண்டு மட்டும் 46 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.