வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் அனைத்து நிறுவனங்களும் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதிச் சம்பளமாக மாதத்திற்கு S$1,400 செலுத்த வேண்டும்.

முன்னர் இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தனது பட்ஜெட் 2022 உரையில் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!

சிங்கப்பூரின் உள்ளூர் ஊழியரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, அரசாங்கம் கவனம் செலுத்தும் நடைமுறைகளில் இதுவும் ஒன்று.

சிங்கப்பூரில் உள்ள குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை மேம்படுத்த இந்த பட்ஜெட் 2022 உதவும் என வோங் கூறினார்.

படிப்படியான ஊதிய உயர்வு (PWM) அடுத்த இரண்டு ஆண்டுகளில் சில்லறை விற்பனை, உணவு சேவைகள் மற்றும் கழிவு மேலாண்மை துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த PWM உயர்வு, உட்புற துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஓட்டுநர்களுக்கும் விரிவடையும்.

இந்நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டுப் ஊழியர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் S$1,400 மாத சம்பளத்தை வழங்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!