“உயிரிழந்த ஊழியர்களுக்கு 2 வருட அனுபவம் உள்ளது…” MOM கூற வரும் செய்தி என்ன?

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூரில் இந்த 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 9,000 வேலையிட பாதுகாப்பு விதி மீறல்களுக்கு எதிராக மனிதவள அமைச்சகம் (MOM) அமலாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நடந்த இதே போன்ற விதி மீறல்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாகும்.

லிட்டில் இந்தியா பகுதியில் இப்படியெல்லாம் நடக்குதா?… அனுபவத்தை பகிர்ந்து எச்சரிக்கும் நபர்

நாடாளுமன்றத்தில் வேலையிட பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதனை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 28 வேலையிட இறப்புகள் பதிவாகியுள்ளன, தொற்றுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 17 இறப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதில் பாதி இறப்புகள், உயரத்தில் இருந்து கீழே விழுந்தது மற்றும் வாகன விபத்துக்களில் சிக்கியது எனவும் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது பாதுகாப்பான வேலை நடைமுறைகளை கடைபிடிக்காதது போன்ற காரணங்களால் நிகழ்ந்ததாக டாக்டர் டான் கூறினார்.

இந்த உயிரிழப்புகளில் அதிகமானவை சிறிய, நடுத்தர நிறுவனங்களில் ஏற்பட்டதாகவும் அமைச்சர் டான் சொன்னார்.

“இந்த விபத்துகளில் சிக்கியவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருட வேலை அனுபவம் உள்ள ஊழியர்கள், எனவே அவர்களின் விபத்துக்கு அனுபவமின்மை காரணியாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் அவர்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணம்; கடலில் தவறி விழுந்து பலி – 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சடலம்