வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3 பேர் வேலையிட விபத்தில் மரணித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் (ஜனவரி 31) பிரைம் மூவர் கனரக வாகனம் கடலில் விழுந்ததில் அவர் இறந்ததாக MOM அறிவித்தது.

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

கவனம் சிதறாமல், முதலாளிகளும் ஊழியர்களும் வேலையிடங்களில் கவனத்துடன் பணிபுரிவது அவசியமான ஒன்று என்பதை MOM சுட்டிக்காட்டியது.

பிரைம் மூவர் கனரக வாகனத்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியரை சுமார் 14 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்பு வீரர்கள் மீட்டனர்.

ஆனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் மலேசியாவை சேர்ந்த ஊழியர் என்பதை MOM அறிவித்துள்ளது.

கெப்பல் முனையத்தில் பிரைம் மூவர் கடலுக்குள் விழுந்து ஓட்டுநர் மரணம் – கடலின் 4மீ ஆழத்தில் இருந்து மீட்பு