கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்

foreign workers dorm almost full need accommodation prrof sep19
(Photo by ROSLAN RAHMAN / AFP)

கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முன்னர் முதலாளிகள் அவர்களின் தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை வழங்க வேண்டும் என மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்தது.

இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 19 முதல் நடப்புக்கு வரும் என்று MOM கூறியுள்ளது.

வேலையிடத்தில் 9.5 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்: “பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்”

இருப்பினும், மலேசியர்களுக்கு இது பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகைக் குடியிருப்பு (tenancy) அல்லது ஒப்பந்தங்கள் கீழ் வசிக்கும் வாடகை இடங்கள் (rental agreements) அல்லது தங்குமிடம் வழங்கிய உரிமையாளரின் ஒப்பந்த சான்றிதல் போன்ற ஆவணங்களை முதலாளிகள் அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.

ஒரு வாரத்திற்குள் அனுமதி

தங்கும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட விடுதிகள் (purpose-built dormitories), கட்டுமான தற்காலிக குடியிருப்புகள் (CTQ), தற்காலிக உரிம குடியிருப்புகள் (temporary occupation licence quarters) அல்லது முதலாளிகளின் சொந்த தங்கும் விடுதிகளில் தங்களுடைய ஊழியர்களை தங்க வைத்திருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று MOM கூறியுள்ளது.

ஆறு வாரங்களுக்கு மேல் ஆகலாம்

அதே நேரத்தில், தனியார் குடியிருப்புகள், ஹோட்டல்கள் அல்லது விடுதிகளில் தங்களுடைய ஊழியர்களை தங்க வைக்கும் முதலாளிகள் கூடுதல் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால் ஒப்புதல் அனுமதி பெற ஆறு வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் அது கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் விடுதிகள் கிட்டத்தட்ட நிரம்பியதால் ஊழியர்கள் விடுதிகள் இல்லாத இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்களின் தங்கும் இடத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்