வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம்? – உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் MOM

new work permit CMP Employers provide proof of stay
Photo: Today

Foreign workers Dormitory: தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் சுத்தம் என்பது எப்படி கண்காணிக்கப்படுகிறது என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்தது.

தங்கும் விடுதிகளில் வசித்து வேலை செய்யும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கண்காணிப்பு

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி சட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

சமையலறைகளில் சோதனை

குறிப்பாக விடுதிகளின் சமையலறைகளில் சோதனை நடைபெறுவதாகவும், அதாவது சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார்.

வெளி இடங்களில் இருந்து வரும் உணவு

மேலும், வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற இடங்களில் இருந்து மட்டுமே விடுதி உரிமையாளர்கள் வாங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகத்தில் இருந்து ஊழியர் கையில் வரும்வரை அவைகள் முறையாக கையாளப்படுகிறதா என்பதும் முறையாக கண்காணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

எச்சரிக்கை

இதற்கு பின்பற்றதாக விடுதிகளுக்கு எச்சரிக்கையும், மேலும் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

ஊழியர்கள் புகார் அளிக்க

இது குறித்து ஊழியர்கள் புகார் அளிக்க விரும்பினால் FAST குழு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.