வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் இன்றும் (ஏப். 11).. தமிழ் புத்தாண்டு தினத்திலும் சிறப்பு அன்பளிப்பு

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் இன்று ஏப்ரல் 11 ஆம் தேதி, பெரும்பாலான முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் சுமார் 70,000 பேரிச்சம்பழங்கள் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வரும் புனித ரமலான் மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் ஊழியர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் பண்டிகை விருந்துகள் வழங்கப்படும். இந்த முறை இரண்டுமே ஏப்ரல் மாதத்தில் வந்துள்ளது.

குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. முகம் சுளித்த தமிழர்கள் – சமூக பொறுப்பு முக்கியம்

அதே போல, பெரும்பாலான இந்து வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் தங்கும் விடுதிகளில் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று முறுக்கு மற்றும் லட்டு போன்ற சுமார் 5,000 சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்று தாக்கத்துக்கு இடையில், இந்து மற்றும் முஸ்லீம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) இதனை விநியோகம் செய்யவுள்ளது.

உணவகத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்படி