வெளிநாட்டு ஊழியர்களுக்கென புதிய தங்கும்விடுதிகள்! – விடுதி எந்த பகுதியில் வரப்போகிறது தெரியுமா?

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரு தங்கும் விடுதிகளைக் கட்டி அவற்றை நடத்த ‘Nest Singapore’ என்ற நிறுவனத்தை இந்தாண்டு இறுதிக்குள் மனிதவள அமைச்சகம் அமைக்கும்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்,வேலை செய்யும் முறை பற்றியும்,விடுதிகளை நிர்வகிக்கும் முறை பற்றியும் அமைச்சகம் புரிந்துகொள்ள இந்நிறுவனம் உதவும்.இரண்டு விடுதிகளில் முதலாவது விடுதியைக் கட்டுவதற்கான அடித்தளம் தோண்டும் நிகழ்ச்சி,ஜுரோங்கில் உள்ள துக்காங் இன்னோவேஷன் தெருவில் நேற்று நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.தங்கும்விடுதி நிலத்திற்கு அமைச்சகம் மேலும் ஆதரவளிக்கவும் எதிர்காலத்தில் நெருக்கடிகளுக்கு தயாராக இருக்கவும் இவை உதவும் என்று அவர் கூறினார்.

துக்காங் விடுதி 2025-இல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.விடுதி 2400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும்.மற்றொரு விடுதி 2028-இல் செங்காங் வெஸ்டில் செயல்படத் தொடங்கும்.

இந்த விடுதியில் 7,200 படுக்கை வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது வேறு கூடுதலான தங்கும்விடுதிகளைக் கட்ட அமைச்சகத்திடம் திட்டம் எதுவும் இல்லை என்று மனிதவள அமைச்சகத்தின் செய்தியாளர் கூறினார்.