வெளிநாட்டு ஊழியர்களின் FIN நம்பரை பயன்படுத்தி மோசடி… S$3,176 மதிப்புள்ள முகக்கவசங்களை பெற்றவருக்கு சிறை

foreign workers FIN mask scam
Mothership

Temasek அறக்கட்டளையின் இயந்திரங்களில் இருந்து 397 முகக்கவசங்களை சட்டவிரோதமாக பெற்றதாக 48 வயதான சுவா சா மே என்ற சிங்கப்பூர் பெண் மீது நேற்று திங்கள்கிழமை (ஜன. 17) ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மோசடி குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், இந்த வழியில் ஏமாற்றப்படலாம்… சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் உஷார்!

2020ஆம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதத்தில், ஒவ்வொரு சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கும் இரண்டு மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசங்களை கொண்ட மாஸ்க் கிட்களை Temasek இலவசமாக விநியோகித்தது.

இந்நிலையில், சுவா குற்றங்களில் ஈடுப்பட்ட போது 2 நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்பவராக பணிபுரிந்தார்.

அவரின் பணி தொடர்பாக, அந்த நிறுவனங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் FIN எனப்படும் வெளிநாட்டு அடையாள எண்கள் வழங்கப்பட்டது.

சுவா தனது சொந்த பயன்பாட்டிற்காக அதிக முகக்கவசங்களை Temasek இயந்திரம் மூலம் பெற விரும்பினார். எனவே, சட்டவிரோதமாக அவற்றை பெற ஊழியர்களின் FIN தகவலை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, சிங்கப்பூரை விட்டு வெளியேறிய அல்லது கோவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூருக்குள் நுழைய முடியாமல் போனதாக நம்பப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் FIN தகவலை சுவா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மொத்தம் 397 முகக்கவச கிட்களை அவர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார். அதன் மொத்த மதிப்பு S$3,176 என்றும் கூறப்பட்டுள்ளது.

மோசடியில் பாதிக்கப்பட்ட OCBC வங்கி வாடிக்கையாளர்கள் – மேற்பார்வை நடவடிக்கை மேற்கொள்ள MAS பரிசீலனை!