வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் செய்யும் வேலை… சொந்த நாட்டுக்கு ஊழியர்கள் செல்லும் நிலை – இனி மாறும் MOM நம்பிக்கை

(Photo: Today)

Singapore Jobs: வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் செலுத்தமுடியாமல் போன மருத்துவ செலவு குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது 2020 மற்றும் 2022க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 30 முதலாளிகள் மருத்துவ செலவினங்களை செலுத்த முடியாமல் போனதாக MOM குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதுபோன்ற பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் கூட இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளன.

முதலாளிகள் தங்களின் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் காப்புறுதி அதிகமாக வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குறித்து நாம் செய்தி வெளியிட்டோம்.

ஆகிய காரணத்தால் மருத்துவ செலவு செலுத்தப்படாத நிலை இனி மாறும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

மருத்துவ உதவி தேவைப்படும் ஊழியர்களை சிங்கப்பூரில் வைத்து சமாளிப்பதற்கு பதிலாக சொந்த நாட்டுக்கு அவர்களின் முதலாளிகள் அனுப்பி வைப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

காப்புறுதி அதிகமாக வாங்க வேண்டும் என்பதால் இனி வரும் காலங்களில் நிலைமை மேம்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.