சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்

"வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது" - மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம் Ng renews call to ban ferrying workers on lorries சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு - இனியும் அதே தான்
Stomp

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வதற்கு கடும் எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

அதற்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அரசாங்கத்திடம் ஒப்படைத்து அவ்வாறான போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

சாங்கி நீர்நிலையில் மிதந்த ஆடவர் உடல்… இறந்தது உறுதி: யார் அவர் ? – போலீஸ் விசாரணை

ஆனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதே போக்குவரத்து வசதி தான் தொடரும் என்ற கவலையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏனெனில், அந்த கோரிக்கை மனுக்களுக்கு எதிராக சுமார் 18,000 நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு அதிக செலவாகும் என்றும், நிறுவனங்களுக்கு அது காட்டுப்பிடியாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதுடன், வேலை உபகரணங்களையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேருந்து ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் இந்த சூழலில் மாற்று ஏற்பாடு சாத்தியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் லாரிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது, தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவோம் என்று அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

துவாஸ் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – மயக்க நிலையில் கிடந்தவர் மரணித்த சோகம்