நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

foreign workers lorry accident workers conveyed hospital
Stomp

மத்திய அதிவிரைவுச் சாலையில் (CTE) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன.31) காலை நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அன்று காலை 9.20 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பேருந்து, லாரி, டாக்சி மற்றும் கார் சம்பந்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கெப்பல் முனையத்தில் பிரைம் மூவர் கடலுக்குள் விழுந்து ஓட்டுநர் மரணம் – கடலின் 4மீ ஆழத்தில் இருந்து மீட்பு

மேலும், 22 முதல் 60 வயதுக்கு உட்பட்ட எட்டு நபர்கள், சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் லாரியில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் என ஸ்டாம்ப் கூறியுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி