வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

Budget 2024 foreign workers
Pic: AFP

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் கட்டாய அம்சங்களை வட்டார அமைச்சர் எமி கோர் இன்று (மார்ச் 9) தெரிவித்தார்.

அதாவது, ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு!

கூடுதலாக, மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க மேற்கூரை அமைப்புகள் கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க, சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும், நிலையான மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் விநியோக குழு விவாதத்தின் போது டாக்டர் கோர் கூறினார்.

வேகக் கட்டுப்பாட்டு கருவி

அதிகபட்சமாக 3,500 கிலோ எடைக்கு அதிகமுள்ள ஊழியர்களை ஏற்றி செல்லும் அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.

இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் ஏற்கனவே அதிகபட்சமாக 12,000 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், அதிகபட்சமாக 3,500 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் வேக எச்சரிக்கை கருவிகள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

மேற்கூரை அமைப்புகள்

ஊழியர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் அனைத்து லாரிகளிலும் கட்டாயமாக மழை பாதுகாப்பு கவசங்கள் முழுவதுமாக பொருத்தப்பட வேண்டும்.

சீட் பெல்ட்

பின்புறத்தில் சீட் பெல்ட்களை பொருத்துவது சாத்தியமில்லை மற்றும் உண்மையில் அது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருத்து கணிப்புகள் உள்ளதாகவும் டாக்டர் கோர் கூறினார்.

#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!