வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரியின் மேலே கட்டப்பட்ட மரப்பலகை.. காற்றில் பறந்து கார் சேதம் (வீடியோ)

foreign workers plywood-lorry-fly-hit-car-no-space
SG Road Vigilante/Facebook

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரியின் மேலே ஏற்றிச்செல்லப்பட்ட மரப்பலகை ஒன்று சாலையில் பறந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

அயர் ராஜா விரைவுச் சாலையில் இருந்து துவாஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியில் அந்த சம்பவம் நடந்துள்ளது.

“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

மேலும் இச்சம்பவம் கடந்த அக்.17 அன்று காலை 10:48 மணியளவில் நடந்தது என்றும், லாரியின் பின்னால் சென்ற கார் ஒன்றில் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பறந்து வந்த அந்த பலகை காரின் மீது மோதி சேதப்படுத்திதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்ஜி ரோடு விஜிலன்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில், லாரியின் பின் பகுதி முழுவதும் ஊழியர்கள் அமர்ந்து பயணம் செய்வதை காண முடிந்தது.

“இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம்