கார் கவிழ்ந்து விபத்து.. உயிரை காப்பாற்ற லாரியில் இருந்து இறங்கி ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர்கள் – குவியும் பாராட்டு

foreign workers rescue trapped driver
Shin Min Daily News

Upper Cross Street நடுவே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று ஷின்மின் டெய்லி நியூஸ் நேற்று முன்தினம் (மே 2) தெரிவித்தது.

இதில் விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட குறைந்தது 10 பேர் உதவிக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு பிறகு முதன் முறையாக பெரிய அளவில் ஒன்றுகூடிய “வெளிநாட்டு ஊழியர்கள்” – மகிழ்ச்சி, கொண்டாட்டம்!

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30) ​​இரவு 10.30 மணியளவில் நடந்ததாக ஷின்மின் தெரிவித்தது.

வலதுபுறம் கவிழ்ந்த காரில் பெண் ஓட்டுநர் சிக்கியிருப்பதைக் கண்டதாக ஷின்மின் டெய்லி நியூஸ் வாசகர் ஒருவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இந்த சம்பவத்தைக் கண்டதும் உதவிக்கு உடனடியாக நிறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

கவிழ்ந்த காரைச் சரிசெய்வதற்கு ஊழியர்களுடன் சேர்ந்து பலர் விரைந்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அவர்களின் கூட்டு முயற்சியால், கார் நிமிர்த்தப்பட்டு அந்த பெண் மீட்கப்பட்டார்.”

அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக SCDF கூறியுள்ளது.

ஓடி உதவிய அவர்களின் துரித செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரில் கம்பீரமான ராஜ நாகம், பெரிய உடும்பை அப்படியே விழுங்கும் பிரம்மிப்பு காட்சி – இணையத்தில் வைரல்