அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை

singapore Foreigners mom salary
AFP

தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு திரும்பி வந்ததை அடுத்து சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட தரவுகள் மேற்கண்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன.

சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த சிங்கப்பூரின் மக்கள்தொகை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அவர்களில் 61% பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 9% பேர் நிரந்தரக் வாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 30% பேர் வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது வெளிநாட்டு மாணவர்கள் இங்கு உள்ளதாக தரவுகள் கூறியுள்ளன.

2022 ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சுமார் 162,000 வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

அவர்களின் பெரும்பகுதி வருகையால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் தாமதமான திட்டங்களை உரிய நேரத்தில் முடித்து கொடுக்க அதிக வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துள்ளனர்.

கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூரில் உயரும் மின்சார கட்டணம் – நீங்கள் தங்கும் இடத்திற்கு கட்டணம் எவ்வளவு..? – தெரிந்துகொள்ளுங்கள்