ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை… சிக்கிய நிறுவனங்கள் – 12 வேலை நிறுத்த உத்தரவுகள், 232 அபராதங்கள்

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் சுமார் 750க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதாவது கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் ஆகிய துறைகளில் MOM ஆய்வுகளை மேற்கொண்டது.

இதன் விளைவாக,சோதனைகளில் சிக்கிய சுமார் 558 நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 1,828 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 12 வேலை நிறுத்த உத்தரவுகள் மற்றும் 232 அபராதங்கள் என மொத்தம் S$499,150 அபராதம் விதிக்கப்பட்டதாக MOM கூறியது.

ஆய்வுகளின் போது, ​​விபத்துக்கள் ஏற்படுத்திய பொதுவான செயல்கள் என்ன என்பதும் கண்டறியப்பட்டது.

அதில், மோசமாக தரை தளங்கள், மோசமான பராமரிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது மற்றும் ஊழியர்கள் சரியான பாதணிகளை அணியாதது ஆகியவை எனவும் MOM கூறியுள்ளது.