வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம் உயருமா? – எந்த ஊழியர்களுக்கு அதிஷ்டம் – பாதிக்கப்படும் கட்டுமான ஊழியர்கள்

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் ஒரே கேள்வி “எப்போது எங்கள் சம்பளம் உயரும்?” என்பது தான்.

சிங்கப்பூரில் தற்போது பொருளாதார வளர்ச்சி மெதுவடைந்து இருக்கும் காரணத்தால் சம்பள உயர்வும் மெதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் PR நிரந்தர வாசிகளுக்கு சம்பள உயர்வு மெதுவாக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீப காலங்காலாக விலைவாசியை விட சம்பளம் மெதுவாக உயர்வு காண்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் அடிப்படையில், பயணத்துறை சார்ந்த ஊழியர்களின் சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறையை விட கட்டுமானம், சில்லறை, உணவு பான துறைகளில் சம்பள உயர்வு குறைவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கத்தால் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களே அதிகம் பாதிக்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.