வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை… ஆண்டின் நடுப்பகுதியில் முந்தைய நிலைகளை எட்டும்!

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினாலும், நாட்டில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கத் தேவையில்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

“சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், சிங்கப்பூருக்குள் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வர அது வழிவகை செய்யும்.”

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சனை – இந்திய மற்றும் மலாய் மக்களின் கருத்து

ஆண்டின் நடுப்பகுதியில், சிங்கப்பூரின் கட்டுமானத் துறை ஊழியர்களின் நிலை, தொற்றுக்கு முந்தைய நிலைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வோங் கூறியதாக அந்த செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

அதிகரித்துள்ள பணவீக்க அழுத்தத்தை கூடுதல் ஊழியர்களின் உழைப்பால் மட்டுப்படுத்த வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், சிங்கப்பூருக்குள் பயணம் செய்வது மற்றும் வெளி இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது போன்ற விதிகள் மார்ச் மாத இறுதியில் இருந்து தளர்த்தப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தற்போது மிகப் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவிட் பாதிப்புகள் மீண்டும் எழுச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!