வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் கடத்தல்… “S$755 கமிஷன்” – உதவிய 9 பேருக்கு செக்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் கடத்தி கொண்டு வந்த குற்றத்திற்காக 9 சந்தேக நபர்களை மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு குழு கைது செய்துள்ளது.

அதில் சபா வழியாக மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்களை கடத்தியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 30 முதல் 41 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்திய ஊழியரை காணவில்லை.. ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே!

மற்ற நான்கு சந்தேக நபர்களும், 37 மற்றும் 43 வயதுக்குட்பட்டவர்கள். அதில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர்.

திருடப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி சபாவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்ல அவர்கள் உதவியதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து தலா S$755 அவர்கள் வசூலித்ததாகவும் பெர்னாமா தெரிவித்துள்ளது.