ஒரு பக்கம் ஊழியர்களின் பற்றாக்குறை… இன்னொரு பக்கம் நடப்பில் இருக்கும் கடுமையான பணியமர்த்தல் விதிகள் – தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

migrantworker
Getty Images

சிங்கப்பூர் கிட்டத்தட்ட தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்துக்கு தற்போது சென்றுள்ளது, சிலவற்றை தவிர அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

விமானச் சேவையில் சிக்கல்களைக் எதிர்கொள்ளும் சிங்கப்பூர் விமான நிலையம் – பாதிப்பு ஏற்படுமா?

குறிப்பாக, சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கடுமையான பணியமர்த்தல் விதிகள் காரணமாக ஊழியர்கள் இங்கு வர யோசிக்கின்றனர்.

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, “கோவிட் உடன் வாழ்வது” என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதில் சிங்கப்பூர் அண்டை நாடுகளை விட முன்னேறியுள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியுள்ளது.

இந்தியா மற்றும் மலேசியா பயணிகள் சிங்கப்பூர் தொடர்பாக அதிக கூகுள் தேடல்ககளில் ஈடுபட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தற்போது வெளிநாட்டு ஊழியர்களின் வருகை அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது, இருப்பினும் தேவை அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Work permit ஊழியர்களுக்கான நுழைவு மேலும் எளிதாகும் பச்சத்தில் இந்த பற்றாக்குறை நிவர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் ஒன்றன் பின் ஒன்றாக தளர்வுகளை அறிவித்து வருகிறது, வெளிநாட்டு ஊழியர்கள் வருகை விதிகள் தளர்வும் விரைவில் வரும் என எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

“சிங்கப்பூரை விட்டு சென்ற ஊழியர்கள் சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.. சிங்கப்பூர் ஊழியர்களின் பிணைப்புகளை பலப்படுத்தியுள்ளது”