வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி

(Photo: Today)

வெளிநாட்டு ஊழியர்கள் சொந்தங்களை பிரிந்து வந்து சொல்ல முடியாத பல வேதனைகளுடன் தான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர்.

வேலையிடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள் ஊழியர்களின் உயிரை பறிப்பதோடு, அவர்களின் குடும்பங்களையும் நிலைகுலைய செய்கின்றன.

கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வினோத் குமார் என்ற ஊழியர் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தார், அவருக்கு வயது வெறும் 20 தான். சாதிக்க புறப்பட்டு வந்த இளைஞன் சவப்பட்டியில் சென்றது நம் இதயங்களை சுக்குநூறாய் உடைந்தது.

இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக பாதுகாப்பற்ற வேலையிடங்கள் உள்ளதாக நிபுணர்களால் கூறுகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்தும் அதனை கூறினால் நம் வேலை போய்விடும் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கலாம்.

அதனை கண்டறிந்து நீங்கள் என்ன செய்வது என்று அறியாது குழப்பத்தில் கூட இருக்கலாம்.

இனி நீங்களும் தைரியமாக புகார் அளிக்கலாம், அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கம் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.

SnapSAFEஐப் பயன்படுத்தி மனிதவள அமைச்சகத்திடம் நேரடியாக புகாரளிக்கலாம். இது மிக விரைவான மற்றும் எளிதான முறை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்த விவரங்களை கொடுத்தால் மட்டும் போதும். உங்கள் அடையாளம் மற்றும் தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்பதை MOM உறுதிப்படுத்தியுள்ளது.

நீங்கள் அளிக்கும் புகார் ஒரு உயிரைக் காப்பாற்ற கூட உதவலாம் என்பதை மனதில் பதிய வையுங்கள்.

“வேலையிடங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று MOM கூறியுள்ளது.

SnapSAFE இல் எப்படி புகார் அளிப்பது?

  • பாதுகாப்பற்ற செயல்கள் அல்லது சூழல்களை புகைப்படங்கள் எடுங்கள்
  • குறைபாடுகள் குறித்து கூறுங்கள்
  • எந்த இடம் என்பதை குறிப்பிடுங்கள்
  • சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் (தெரிந்தால்) குறிப்பிடுங்கள்
  • பாதுகாப்பற்ற சூழலை கண்ட தேதி மற்றும் நேரம்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்