தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!

Capital punishment in Singapore is a legal penalty

கூட்டுரிமை வீட்டில் பாதுகாப்புக் காவலராக இருந்த தருணத்தில், வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு 27 மாத சிறை மற்றும் 3 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையை விட்டு வெளியே வந்த ஜப்பானியர் ஆடவர் மற்றும் பெண் ஒருவரிடம், சட்டவிரோதமாக அங்கு நுழைந்ததற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் மிரட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் காணாமல் போயிருந்த சிறுமி பத்திரமாக கிடைத்தார் – பகிர்ந்த Micset வாசகர்களுக்கு நன்றி!

வெஸ்ட் கோஸ்ட் கிரசண்டில் உள்ள சீஹில் கூட்டுரிமை வீட்டில் மூத்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த மலேசியரான கணேசன் குணசேகரன், கழிப்பறையை விட்டு வெளியே வந்த ஜோடி உடலுறவு கொண்டதாக போலீசில் புகார் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

அந்த பெண் ஒரு மாணவி, அங்கு வசிக்கும் அந்த ஜப்பானிய பெண்ணுக்கு 26 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 33 வயதான கணேசன், அவர்களிடம் பணம் பறிக்க இந்த மோசமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு S$10,000 வேண்டும் என்று கேட்ட கணேசன், அவர்களின் முகம் கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருப்பதாகவும், படங்களை நீக்க 90 கேமராக்களில் உள்ள காட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் அவர்கள் S$2,000 தருவதாகவும், மீதம் பணத்தை ஒருவாரம் கழித்து தருவதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தெளிவாக போலீசிடம் புகார் செய்தனர்.

அதனை அடுத்து கணேசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், 2 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

“முஸ்லீம் சமுதாய மக்களுக்கு நன்றி” தெரிவித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ!