“கொரோனா சூழலிலும் தங்கள் கடமைகளை தாண்டி சேவையாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள்”

foreigners need social works
Pic: Roslan RAHMAN / AFP

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் சேவை துறைக்கு ஆதரவளிக்க வெளிநாட்டினர்கள் தேவை என சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர்வாசிகளை அதிகளவில் வேலைக்கு எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், சிங்கப்பூருக்கு வெளிநாட்டினர்கள் தேவை என சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு சாவல்களை எதிர்கொண்ட போதிலும் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறியது – பிரதமர் திரு லீ.!

சமூக சேவைத் துறையில் வெளிநாட்டவர்களின் விகிதம் தேசிய அளவைவிடக் குறைவு என்றும், அவர்களில் பெரும்பாலானோர் பராமரிப்பு ஊழியர்களாகவும், சமூக சேவை உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

மாறும் வேலை நேரம், உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் சோர்ந்து போகக்கூடிய பணி இயல்பு ஆகியவை உள்ளூர்வாசிகளை ஈர்க்கவில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா கிருமித்தொற்று சூழலிலும் நிலையத்தின் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் தங்களது கடமைகளை தாண்டி சேவையாற்றி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோல்டன் மைல் வளாகத்தில் வாலிபரை அடித்து தாக்கிய 2 பேர் கைது – காணொளி