வனப்பகுதிகளை அழித்து அமைக்கப்படும் வீடுகள்! – சுற்றுச்சூழலின் தாக்கம் எப்படி இருக்கும்?

(Photo credit: LTA)

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகில் உள்ள 31 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி அகற்றப்படவுள்ளது.சுமார் 43 காற்பந்து மைதானங்களுக்குச் சமமான நிலப்பகுதி வீடமைப்பு திட்டங்களுக்காக அகற்றப்படவுள்ளது.

வனத்தை அகற்ற 6 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு அகற்றப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.அதேசமயம்,வீடமைப்புத் திட்டங்களும் படிப்படியாகத் தொடங்கி 4 முதல் ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வனப்பகுதி Upper East Coast Road, Bayshore Road, East Coast Parkway, Bedok Camp ஆகியவற்றுக்கு நடுவில் அமைந்துள்ளது.புதிய கட்டமைப்பில் ழக வீடுகள், தனியார் வீடுகள், இரண்டு ரயில் நிலையங்கள் ஆகியவை அமைந்திருக்கும்.

வனப்பகுதிகளை நீக்குவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதனைப் பொதுமக்கள் காணலாம்.மேலும்,கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் அவற்றைச் சமர்ப்பிக்கலாம்.