சிங்கப்பூருக்கு வந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி!

சிங்கப்பூருக்கு வந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி!
Photo: Former CM H.D.Kumaraswamy Official Twitter Page

 

கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு மே 10- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 13- ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் இல்லத்தில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்

மற்றொருபுறம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், இருதய சிகிச்சைக்காகவும் சிங்கப்பூர் வந்துள்ளார். இங்குள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

அவருடன் நேர்முக உதவியாளர் மற்றும் மகன் நிகில் உள்ளிட்டோரும் சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

டிப்டாப் உடையில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பெண்கள் 4 பேர் கைது

கடந்த 2018- ஆம் ஆண்டு நடந்த கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.