சிங்கப்பூர் நுகர்வோருக்கு நன்றி! – வாரி வாரி கோழி இறைச்சியை சிங்கப்பூருக்கு அனுப்பும் இந்தோனேசியா

frozen chicken from indonesia poultry singapore
இந்தோனேசியாவில் இருந்து கடந்த வாரம் 50 டன் உறைந்த கோழிகள் அடங்கிய முதல் தொகுதி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த மாதம் உறைந்த கோழிகள் சிங்கப்பூருக்கு வரவிருக்கிறது. முதல் ஏற்றுமதி Charoen Pokphand Indonesia (CPI) மூலம் வழங்கப்பட்டது.ஒவ்வொரு கண்டெய்னரும் 25 டன் எடை கொண்டது..

இன்னும் ஓரிரு நாட்களில் கோழி இறைச்சி விற்பனை சந்தைக்கு வரும் என்று ஃபிஷரி போர்ட் சாலையில் உள்ள லியோங் ஹப்பின் இயக்குனர் ஆல்ஃபிரட் கூறினார்.மேலும் 5 கண்டெய்னர் கோழி இறைச்சியை நிறுவனம் ஆர்டர் செய்துள்ளதாக அவர் கூறினார்.பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது இந்தோனேசியாவின் இறைச்சி 2.2 கிலோ எடையுடன் பெரியதாகவும், கனமாகவும் இருப்பதால்,கோழி அரிசி வியாபாரிகள் மற்றும் பிற வணிகங்களுக்கு விற்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) ஜூன் 30 அன்று கோழி இறக்குமதிக்கான புதிய ஆதாரமாக இந்தோனேசியாவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலிருந்து ஏற்றுமதிகள் வந்துள்ளன. இந்த ஆண்டு இறுதி வரை சிங்கப்பூருக்கு 1,000 டன் கோழி இறைச்சியை வழங்க CPI ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 30 பில்லியன் ரூபாய் என்று கூறப்படுகிறது.

கோழி விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்ட போது ,சிங்கப்பூர் நுகர்வோர் கோழியை வாங்கும் முறையை மாற்றி உணவுத் துறைக்கு உதவியதன் மூலம் அவர்கள் காட்டிய நெகிழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக டாக்டர் கோ கூறினார்.