சிங்கப்பூரிலிருந்து தப்பிய ஜோடி சிக்கினர் – சிங்கப்பூர் காவல் படையிடம் ஒப்படைப்பு

fugitive-couple-luxury-goods-caught
ஆடம்பர பொருட்கள் வாங்குபவர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ததாகக் கூறப்படும் தப்பியோடி தலைமறைவான சிங்கப்பூர் ஜோடி ஆகஸ்ட் 11 அன்று ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து லாரியின் கன்டெய்னர் பெட்டியில் மறைந்திருந்து இருவரும் தப்பிச் சென்றனர்.

சிங்கப்பூரில் முன்னாள் சூ விற்பனையாளராக இருந்த பை ஜியாபெங், 26, மற்றும் அவரது தாய்லாந்து மனைவி, பன்சுக் சிரிவிபா, 27, ஆகியோர் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்ற பின்னர் உறுதியளித்த ஆடம்பர பைகள் மற்றும் கடிகாரங்களை வழங்காமல் மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிங்கப்பூர் காவல் படையின் பிடியில் சிக்காமல் தலைமறைவான ஜோடிக்கு எதிராக கைது வாரண்ட் மற்றும் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து சிங்கப்பூர் போலீசார் தம்பதியை கண்டுபிடிக்க ராயல் மலேசியா காவல்துறையின் உதவியை நாடினர்.இந்நிலையில் வியாழன் அன்று இந்த தம்பதியினர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு SPF-யிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜூலை 4 ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியில் மோசடித் தம்பதித் தப்பிச் செல்ல உதவியதாக முகமட் ஃபஸ்லி அப்துல் ரஹ்மான், 38, மற்றும் லாரி டிரைவர் முகமது அலியாஸ், 40, ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர்.