வாரணாசியில் நடந்த ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் அமைச்சர்!

வாரணாசியில் நடந்த ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Ministry Of Foreign Affairs, Singapore

 

இந்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில் சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சரும், கல்வி, வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education Dr Mohamad Maliki Osman) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு சென்றார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

முதலில் தலைநகர் டெல்லிக்கு சென்ற அமைச்சருக்கு சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வாரணாசிக்கு சென்ற அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான், ஜி20 நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களைத் தனித்தனியே நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தினார்.

ஜூன் 11- ஆம் தேதி முதல் ஜூன் 13- ஆம் தேதி வரை நடைபெற்ற ஜி20 நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் (G20 Development Ministers’ Meeting), சர்வதேச பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, கடன் நெருக்கடிகள், தகவல் தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சேதமடைந்த அரசுப் பள்ளி…ரூபாய் 1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித் தந்த சிங்கப்பூர் சகோதரர்கள்!

இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான், தாயகம் திரும்புகிறார்.