ஜி20 உச்சி மாநாட்டிற்கு இடையே சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்த தலைவர்கள்!

Photo: Singapore Prime Minister Official Twitter Page

இந்தோனேசியா நாட்டின் பிரபல சுற்றுலா தளமான பாலி தீவில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 15, நவம்பர் 16 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (Indonesia President Joko Widodo) விடுத்த அழைப்பையேற்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் பாலி சென்றடைந்தார்.

ஜி20 மாநாட்டிற்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பாலி சென்றுள்ளனர்.

Photo: Singapore Prime Minister Official Twitter Page

இதைத் தொடர்ந்து, பாலியில் நேற்று (16/11/2022) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை தனித்தனியே சந்தித்துப் பேசினர்.

முகநூலில் எச்சரிக்கை ! – இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்; கனமழையால் ஏற்படும் திடீர்வெள்ளம்!

இந்த சந்திப்பின் போது, பருவநிலை மாற்றம், பொருளாதாரம், முதலீடுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், ஜி20 உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.